உன்னை சொல்லால் வடிக்க
சொற்களை திரட்டுகிறேன்….
சொற்கள் வர மறுக்கின்றன
உள்ளத்தில் ஆடும் ஊஞ்சலாய்
உன் நினைவுகள்….
அன்னை மடியில் தவழ்ந்த நாட்களில்
அரவணைப்பை உணர்ந்தேன்….
அவள் நினைவுகளில் தவழும் நாட்களில்
அன்பை உணர்கிறேன்…
கருவறையில் தொடங்கிய வாழ்வில்
காலத்தால் அழிக்கப்படாத பக்கங்களாய்உன் நினைவுகள்….
மெல்லென நகரும் ரயில் பயணம் ……
யன்னலோர இருக்கைகள்….
அவள் நினைவுகளுடன் நகரும் நாழிகைகள்……
எதிரே நீ இருந்தாலும் – உனை
கண்ணாடியில் பார்க்கிறேன்…
உனக்கே தெரியாமல் என்
கண்களால் களவாடப்படும் உன் அழகு….
சிந்தனையில் இடம்பிடித்த – உன்
சிரிப்புகள்..சிரிப்பால் மாறிய
என் வாழ்க்கை…..
வாழ்க்கையில் இடம்பிடித்த
பெண்ணாய் உன் உருவம்….
உனக்காய் துடிக்கும் இதயம்….
இதயத்தில் இடம்பிடித்த உன் பேச்சுகள்…..
பேச்சுகளால் மௌனமாகிய நொடிகள்…..
உருகும் மெழுகாய் என் ஆழ்மனம்…..
கரைசேரும் அலையாய்….
காலத்தின் சோதனைகள்…
அலையால் அழிக்கப்படாத
எழுத்துகளாய் நம் காதல்….
உனை சேரும் நொடிக்காய்
காத்திருக்கிறேன்….
என்றோ ஒரு நாள் சேரும்
நம் காதல் பயணம்….
Leo Ramachandran Sweeskaran